India
ம.பி-யில் ஆட்சியை கைப்பற்றும் ‘காங்கிரஸ்’.. தொடர் வெற்றியில் இந்தியா கூட்டணி - தோல்வியை தழுவும் பா.ஜ.க.!
மத்திய பிரதேச மாநிலத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் சிறிய கட்சிகளின் ஆதரவோடு அங்கு ஆட்சியை பிடித்தது.
ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அங்கு அதிருப்தி அலைவே தொடர்ந்து எழுந்து வருகிறது.
அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், Times Now Navbharat மத்திய பிரதேசத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என்பது குறித்து ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் 230 சட்டப்பேரவை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க 42.80% வாக்குகளுடன் 102 முதல் 110 இடங்களையும், 43.80% வாக்குகளுடன் காங்கிரஸ் 118 முதல் 128 பிடித்து ஆட்சியை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக Navbharat Samachar என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என்றும் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. தோல்வி பயத்தில் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 3 ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் 7 எம்.பி.க்களையும் பா.ஜ.க களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?