India
”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. ராகுல் காந்தி MP சொல்லும் விளக்கம் என்ன?
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி எம்.பி, " மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெரும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு 60% வாக்குகள் உள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துக்களைப் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் இந்தியாவின் பெயர் பாரத் போன்ற பிரச்சனைகளை திசைதிருப்பப் பார்க்கிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்றமுடியும். ஆனால் இதில் பா.ஜ.க அக்கறை காட்ட மறுக்கிறது. தேவையில்லாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி வரையறைகளை நிர்ணயம் செய்துள்ளது.
மணிப்பூரில் நான் பார்த்த கொடூர சம்பவங்களை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நாங்கள் மணிப்பூருக்குச் சென்றபோது எங்கள் பாதுகாப்பில் குக்கி சமூகத்தவர்களை அழைத்து வர வேண்டாம் என மெய்தி சமூகத்தினர் எச்சரித்தார்கள். ஏன் என்றால் அவர்களைக் கொன்று விடுவார்கள் என்று கூறினார்கள். அதேபோல்தான் குக்கி சமூகத்தினரும் சொன்னார்கள்.
இப்படி இரண்டு சமூகத்திற்கும் இடையே வெறுப்பை பா.ஜ.க உருவாக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.கவின் வெறுப்பு அரசியல் விளையாட்டுதான் நடந்து வருகிறது. தற்போது மணிப்பூர் என்ற எண்ணமே பலருக்கும் இல்லை. மணிப்பூரை நாம் மீட்டெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!