India
நெல்லை TO சென்னை.. ஒரே நாளில் 9 வந்தே பாரத் இரயில்கள் தொடக்கம்.. எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம் ?
இந்தியாவில் இரயில் சேவையை மேம்படுத்தும் வகையிலும் 75 நகரங்களை இணைக்கும் படி வந்தே பாரத் விரைவு இரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் இரயில் கடந்த 2019-ம் ஆண்டு டெல்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் இரயில் சேவை சென்னை - மைசூரு இடையே கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தற்போது சென்னை - நெல்லை இடையே இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதனோடு சேர்ந்து இன்று நாடு முழுவதும் மொத்தம் முக்கிய நகரங்களில் 9 வழித்தடங்களில் இந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை வரை இயக்கப்படும் இந்த இரயில் வெறும் 8 மணி நேரத்தில் சென்று விடும். இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வரும் அக்.2-ம் தேதி வரை முன்பதிவு நிரம்பியுள்ளது.
9 வழித்தடங்கள் என்னென்ன ?
1. சென்னை - நெல்லை,
2. விஜயவாடா - சென்னை,
3. உதய்பூர்- ஜெய்ப்பூர்,
4. ஹைதராபாத் - பெங்களூரு,
5. பாட்னா - ஹவுரா,
6. ராஞ்சி - ஹவுரா,
7. காசர்கோடு - திருவனந்தபுரம்,
8. ரூர்கேலா - புவனேஸ்வர் - புரி,
9. ஜாம்நகர் - அகமதாபாத்
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!