India
"அவருக்கு காது கேட்கவில்லை என நினைக்கிறேன்"- தொகுப்பாளரால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பினராயி விஜயன்!
கேரள மாநிலம் காசர்கோடு பேடடுக்கா ஃபார்மர்ஸ் சர்வீஸ் கூட்டுறவு வங்கிக் கட்டட திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், தொழிற்சங்க கொள்கைகள் கூட்டுறவுத் துறையை எப்படிப் பாதித்தன என்பதைப் பற்றி எல்லாம் பேசினார்.
தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், வேறொரு பகுதியில் இருந்த தொகுப்பாளர் ஒருவர் மைக்கில் "அடுத்தாக பரிசுகள் வழங்கப்டுகிறது" என்றுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் பினராயி விஜயன், அவர் பேசிக்கொண்டிருந்த மைக்கில் தனது பேச்சை முடிக்கும் முன்பே அறிவித்து விட்டார்களே! என்று கேலிக்கையாக கூறி, தனது பேச்சை தொடர்ந்தார்.
அப்போது அந்த தொகுப்பாளர் அவர் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தவில்லை. இதனால் எரிச்சலைடைந்த முதல்வர் பினராயி, "அவருக்குக் காது கேட்கவில்லை என நினைக்கிறேன். நான் பேசி முடித்த பிறகுதானே அறிவிப்பு செய்யவேண்டும்" என்று கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையூறு செய்யும் விதமாக நடந்துகொண்டது அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நேற்று கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில ஊடகங்கள் முதல்வர் பினராயி கோபத்தில் சென்றதாக செய்திகள் வெளியிட்டன. மேலும் அவர் கடும் கோபத்தில் சென்றதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "மாநிலத்தைப் பாதிக்கும் விஷயங்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. ஒன்றிய அரசை விமர்சிக்கவில்லை. மாநில அரசைக் குறிவைத்தே ஊடகங்கள் செயல்படுகின்றன. தொழிற்சங்க கொள்கைகள் கூட்டுறவுத் துறையை எப்படிப் பாதித்தன என்பதைப் பற்றி எனது முந்தைய நிகழ்வில் விரிவாகப் பேசினேன். பேச்சின் முடிவில் யாரோ எதையோ அறிவிக்க ஆரம்பித்தனர்.
அந்த தவற்றைச் சுட்டிக்காட்டினேன். அதைச் சுட்டிக்காட்டும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆனால் அதனை ஊடகங்களோ நான் கோபமாக வெளியேறியதாக கூறினர். அதில் கோபப்பட என்ன இருக்கிறது? எது தவறு என்பதை சுட்டிக் காட்டினேன். செய்தி போடுகிறார்கள் என்பதற்காக நான் சுட்டிக்காட்டாமல் இருக்க மாட்டேன். மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது ஒருபோதும் வெற்றியடையாது,'' என்றார்.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!