India
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. நிச்சயிக்கப்பட்டவரோடு வெளியே சென்றபோது நடந்த கொடுமை !
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்குபம் பகுதியில் உள்ள பரிஜால் என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாதங்களில் இந்த திருமணம் நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த பெண்ணும் இளைஞரும் ஒன்றாக இரவு நேரத்தில் வெளியே சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மதுபோதையில் சுற்றிக்கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு வந்த அந்த ஜோடியை அந்த கும்பல் கிண்டல் செய்துள்ளது.
இதன் காரணமாக அந்த பெண்ணுடன் இருந்த இளைஞருக்கு அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது. அந்த கும்பல் இளைஞரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைத்து கீழே விழுந்துள்ளது.
அதன் பின்னர் அந்த இளம்பெண்ணை யாரும் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளது. அதோடு அந்த பெண்ணிடமிருந்து நகைகளையும் அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது. அதன் பின்னர் மயக்கமடைந்த அண்ட் இளைஞர் அந்த பகுதியில் இருந்த காவல்நிலைத்துக்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!