India
வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுவன்.. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி: உறைந்துபோன பெற்றோர் -உ.பியில் சோகம்!
அண்மைக்காலமாக இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ளது அலிகஞ்ச் என்ற பகுதி. இங்கிருக்கும் பள்ளி ஒன்றில் அதிஃப் சித்திக் என்ற சிறுவன் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல் சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் இருக்கும்போது திடீரென சிறுவனுக்கு மூச்சு வாங்கியுள்ளது. இதனால் சிறுவன் சட்டென்று மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சிறுவனை கண்டதும் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், உடனடியாக இதுகுறித்து ஆசியர்களுக்கு தெரிவித்தனர்.
விரைந்து வந்த ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’