India
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் பெண்கள் காத்திருப்பார்கள்?.. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சோனியா காந்தி!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா சாந்தி எம்.பி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர முதல்முறையாக முயன்றவர் ராஜிவ்காந்திதான்.
மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 13 ஆண்டுகளாக தங்களது அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்போது நிறைவேற்றிய மசோதாபோல் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா இல்லை.
விடுதலை போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்றனர். பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தே ஆக வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!