India
“தனியாக ஆபாச Video பார்ப்பது தவறில்லை.. ஆனால்..” - இளைஞர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு : பின்னணி?
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் அமைந்துள்ளது ஆலுவா என்ற இடம். இங்கு வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலம் ஒன்று அருகே இருந்து தனியாக தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தொடர்ந்து அவர் மீது ஆபாசம் குறித்த IPC பிரிவு 292-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் (P.V. Kunhikrishnan) முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், தனது தனியாக ஒருவர் ஆபாச படம் பார்ப்பது அவரவர் தனி விருப்பம் என்று கூறி, அவர் மீதுள்ள வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
மேலும் அவர் அளித்த தீர்ப்பில், "ஒரு நபர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஒரு ஆபாச வீடியோவை மற்றவர்களுக்குக் காட்டாமல் பார்ப்பது குற்றமாகுமா என்பது இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி? அது ஒரு குற்றமாகும் என்று ஒரு நீதிமன்றத்தால் அறிவிக்க முடியாது. அது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் குறுக்கீடு செய்வது என்பது அவரது தனியுரிமையில் ஊடுருவுவதாகும்.
அதேபோல், ஒரு நபர் தனது தனியுரிமையில் மொபைல் போனில் இருந்து ஆபாச வீடியோவைப் பார்ப்பது ஐபிசி பிரிவு 292-ன் கீழ் குற்றம் அல்ல. ஆனால் ஒரு நபர் ஏதேனும் ஆபாசமான வீடியோ அல்லது புகைப்படங்களை பரப்பவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால், அது ஐபிசி பிரிவு 292-ன் கீழ் குற்றமாகும். செல்போன் போன்றவைகளின் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்." என்றார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!