India
உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள்.. கடன் செயலி கொடுமையால் தம்பதி தற்கொலை !
கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்துவந்த நிலையில், இவரின் சகோதரர் கீழ் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நிஜோ போனை எடுக்கவில்லை என அவரின் சகோதரருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த நிலையில்,அவர் மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே நிஜோ மற்றும் அவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனே உள்ளே சென்றுபார்த்தபோது நிஜோவின் குழந்தைகள் படுக்கையில் இறந்த நிலையில், கிடந்துள்ளனர். உடனடியான இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்திவந்தபோது, நிஜோவின் உறவினர்கள் சிலருக்கு நிஜோவின் மனைவி சில்பாவின் மார்பின் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில், கடன்பெற்ற தொகையான 9,000 ரூபாயை உடனடியாகச் செலுத்தவிலை என்றால் இண்டிகா புகைப்படங்கள் மூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் அனுப்பப்படும் என்றும் ஒரு குறும்செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.
தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன்பெற்றதும், அதை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில்,ஆன்லைன் கடன் செயலி கும்பல் சில்பாவின் புகைப்படத்தை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!