India
மாரடைப்பு ஏற்பட்டு 12 வயதில் உயிரிழந்த பள்ளி சிறுவன்.. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்!
குஜராத் மாநிலம் விஜாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் துஷ்யந்த் பிப்ரோதர், 6 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சிறுவனின் தாய் வழக்கம்போல் தனது வேலைகள் செய்யத் தொடங்குவதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்துள்ளார்.
அப்போது வீட்டின் முற்றத்தில் மகன் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பெற்றோர்கள் மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவன் இறப்பிற்கு மாரடைப்பு காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிறிய வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்று தெரியாமல் சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் துஷ்யந்த் பிப்ரோதர் இறப்பை அடுத்து அவர் படித்து வந்த பள்ளியில் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாரடைப்பு காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!