India
பிரியாணிக்கு தயிர் பச்சிடி கேட்டதால் தகராறு.. வாலிபர் அடித்துக் கொலை: ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பிரியாணி கடை ஒன்றுக்கு லியாகத் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். இவர்கள் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இவர்களுக்குக் குறைவாகத் தயிர் பச்சிடி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் லியாகத் கூடுதலாகத் தயிர் பச்சிடி கேட்டுள்ளார். ஆனால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மேலும் லியாகத்தை சில ஊழியர்கள் தனியாக அறைக்கு இழுத்துச் சென்று அடித்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவர்களிடம் இருந்து லியாகத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!