India
பெண் தோழியிடம் பேச்சு.. காதலன் நெஞ்சில் பலமுறை குத்தி கொன்ற காதலி.. பெங்களூருவில் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரேணுகா (எ) ஷீலா (34). இவர் இருக்கும் அதே பகுதியில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜாவத் (24) என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் பப்பில் சந்தித்த இவர்களது நட்பு பழக்கம் காதலில் முடிந்துள்ளது.
ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ எண்ணியுள்ளனர். அதன்படி பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் நன்றாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாத காலமாக இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளார்.
இந்த சமயத்தில் ஜாவத் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த ரேணுகா அவரும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படி தான் சம்பவத்தன்றும் ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் குத்திக்கொண்டே இருந்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜாவத் உயிரிழந்தார். இதையடுத்து தான் செய்ததை உணர்ந்த காதலி ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவரவே அவர்கள் இதுகுறித்து போலீஸ், ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ், ஜாவத்தின் உடலை மீட்டு மருத்துவனமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவத் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் செயல் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!