India
இடைத்தேர்தல்.. 4 இடங்களில் பா.ஜ.க படுதோல்வி: இந்தியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி!
உத்தர பிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளா, திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்குச் செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மேற்குவங்கம் தூப்குரி தொகுதியில் போட்டியிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தபஸி படுதோல்வி அடைத்தார். மேலும் ஏற்கனவே இந்த தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில் இடைத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் மூலம் பா.ஜ.கவிடம் இருந்து இந்த தொகுதியைக் கைப்பற்றியுள்ளது.
அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் டும்பிரி தொகுதியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பீபி தேவி 1,35,480 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் உத்தர பிரதேசம் கோசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது அரசியல் வட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கேரளாவில் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். மற்ற 3 இடைத்தேர்தல் தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றம் தேர்தல் நெருங்கும் வேலையில், இந்தியா கூட்டணி உருவாகியுள்ள நேரத்தில் நடந்த இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
இந்நிலையில் 6 மாநிலங்களில் நடந்த 7 இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரம் பா.ஜ.க 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் பலமும் பா.ஜ.கவின் பலமும் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாகக் காட்டியுள்ளது.
Also Read
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!
-
இந்த தேர்தல் தமிழ்நாடு vs டெல்லிதான்..! அடிமை கூட்டணிக்கு மரண அடி காத்திருக்கிறது: அமைச்சர் கே.என்.நேரு!
-
“ஈகைப் பண்போடு ‘ரமலான்’ கொண்டாடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!