India
பீர் பாரில் தகராறு.. பெண் காவலரின் பல்லை உடைத்த வங்கி பெண் மேலாளர்.. நள்ளிரவில் அட்ராசிட்டி !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது அந்தேரி. இங்கு தனியார் வங்கி ஒன்றில் பெண் ஒருவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது அதே பகுதியில் அமைந்திருக்கும் பீர் பார் ஒன்றுக்கு அவரது நண்பர்களுடன் சென்று வருவார். அந்த வகையில் நேற்றும் தனது 2 நண்பர்களுடன் அந்த பாருக்கு சென்றுள்ளார்.
அங்கே வைத்து நன்றாக பார்ட்டி செய்த அவர், அதிகமாக குடித்ததால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்துள்ளார். இந்த சூழலில் இவர் அங்கிருக்கும் கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அங்கு வேறொருவர் இருந்ததால் அருகில் இருந்த காவலாளி அவரை காத்திருக்க கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், சண்டையிட்டுள்ளார். அதோடு காவலாளியை தாக்கியுள்ளார்.
இந்த சண்டையை அறிந்த பாரின் மேலாளர் வந்தபோது, அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார் அந்த பெண். இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணியளவில் நடைபெற்றதால் பாரின் மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. இதனால் பெண் காவலர்கள் அவரை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றினர். ஆனால் அதிலிருந்து சட்டென்று இறங்கிய அந்த பெண், கெளரி என்ற பெண் காவலர் ஒருவரை சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க சென்ற சக போலிசாரும் தாக்கப்பட்டனர். மேலும் பெண் காவலர் முகத்தை வைத்து, பெண் காவலர் முகத்தை அடித்ததில் அவருக்கு பல் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், அந்த பெண்ணை பிடித்து அடிக்கி காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கே சென்ற பிறகும் கூட அவரது ஆத்திரம் அடங்கவில்லை. தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முயன்று சண்டையிட்டு வந்தார். இதையடுத்து அவரது போதை தெளிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்கப்பட்ட பெண் காவலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீர் பாரில் தகராறில் ஈடுபட்ட பெண் வங்கி மேலாளர் ஒருவர், பெண் காவலரை கடுமையாக தாக்கி பல்லை உடைத்துள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!