India
5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்.. நடந்தது என்ன ?
சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் சல்மா சுல்தானா. இவர் கடந்த அக்டோபர் 21, 2018-ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி வழக்கு பதிவுசெய்த போலிஸார் சல்மா குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இந்த புகாரை அப்படியே விட்டுவிட்டனர். 5 ஆண்டுக்கு பிறகு நிலுவையில் உள்ள வழக்குகள் பரிசீலிக்கப்பட்டபோது சல்மா குறித்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது வங்கி ஒன்றில் சல்மா கடன் வாங்கியதும் அதற்கான வட்டியை இளைஞர் ஒருவர் திருப்பி செலுத்தியதும் பின்னர் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த இளைஞர் வட்டி கட்டுவதை நிறுத்தியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சல்மாவும் அந்த இளைஞரையும் காதலித்து வந்தது தெரியவந்தது, பின்னர் சந்தேகம் ஒன்றில் சல்மாவை அந்த இளைஞர் கொலை செய்து நண்பர் உதவியோடு புதைத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சல்மா புதைக்கப்பட்ட இடத்துக்கு போலிஸார் சென்றபோது அங்கு சாலை அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் சல்மா புதைக்கப்பட்ட இடத்தில் போலிஸார் சோதனை நடத்தியபோது, பாலித்தீன் சுற்றப்பட்ட எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. மேலும், அதோடு ஒரு ஜோடி செருப்பும் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்த எலும்புக்கூடு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!