India
வீட்டில் தனியாக இருந்த சிறுமி.. வீடு புகுந்த 8 பேர்.. கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை !
தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் உள்ள லால் பஜார் என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தம்பி, பெற்றோர் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்த சூழலில் இவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர்.
இதனால் பிள்ளைகள் இருவரும் தனியாக இருந்த நிலையில், மீர்பேட்டை பகுதியிலுள்ள உறவினர் ஒருவர், இரண்டு பேரையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சென்ற சிறுமி துணை கடை ஒன்றிலும், சிறுவன் பிளக்ஸ் போர்டு வைக்கும் இடத்திலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில் சிறுமி தினமும் கடைக்கு சென்று வருவதை கும்பல் ஒன்று கவனித்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் சிறுமி வீடு திரும்பியுள்ளார். வீட்டில் அவர்களது உறவினர் இல்லை என்பதால், சகோதரர் மற்றும் பக்கத்துக்கு வீட்டு சிறுவர்களுடன் விளையாடியுள்ளார். அப்போது அங்கே வந்த அந்த 8 பேர் கொண்ட கும்பல், சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு, அதில் 3 பேர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அனைவரும் தப்பியோடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த உறவினர், அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு செய்து அந்த கும்பல் யார் என்ன என்று தேடி வந்த நிலையில், அதில் 6 பேரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 வயது சிறுமியை வீடு புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
மும்பையில் நடைபெறும் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025!’ : தமிழ்நாடு அரசு பங்கேற்பு! - முழு விவரம் உள்ளே!
-
குளத்தில் குதித்த காதலன் : காப்பாற்ற முயன்ற காதலி - நடந்தது என்ன?