India
நண்பரின் மகளுக்கு வன்கொடுமை.. அரசு அதிகாரிக்கு துணைபோன மனைவி.. அதிரடி ஆக்ஷன் எடுத்த டெல்லி அரசு !
தலைநகர் டெல்லியில் வசித்து வருபவர் பிரேமோதய் ஹாக்கா. இவர் டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரியாக இருக்கிறார். இந்த சூழலில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். நண்பருக்கு 16 வயதில் பெண் குழந்தை இருப்பதால் அவரை தானே வளர்ப்பதாக கூறி அவரை, தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார் இந்த அதிகாரி.
அந்த சிறுமி, அதே பகுதியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் சிறுமியை கடந்த 2020 - 2021 ஆண்டுகளில் பல முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை மிரட்டி இதனை வெளியே யாரிடமும் சொன்னால் விளைவு மோசமாக இருக்கும் என மிரட்டியும் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த சூழலில் இது தொடரவே சிறுமி ஒரு முறை கர்ப்பமடைந்துள்ளார். சிறுமி கர்ப்பத்தை தனது மனைவியிடம் அதிகாரி பிரேமோதய் ஹாக்கா கூறவே, அவர் இது வெளியே தெரியாமல் மறைக்க பல விஷயங்களை செய்துள்ளார். அதன் படி தனது மகனை விட்டு கருக்கலைப்பு மாத்திரையை வாங்க சொல்லி அதனையும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தெரியவரவே, உடனே அட்னஹ் அதிகாரிகள் வீட்டுக்கு விரைந்தனர். அங்கே இருந்த பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அதிகாரியை விசாரணைக்கும் அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்த சிறுமியிடம் இதுகுறித்து கேட்கவே, தனக்கு நேர்ந்த கொடுமைகளை கதறி அழுதுகொண்டே தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அரசு அதிகாரி பிரேமோதய் ஹாக்கா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரி பிரேமோதய் ஹாக்காவை, தனது பணியில் இருந்து இடைநீக்கம் செய்ததோடு, அவரை கைது செய்தும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து கணவரின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் போலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குழந்தை மற்றும் பெண்கள் நலவாரிய அதிகாரி ஒருவர் தனது நண்பரின் மைனர் மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கேரளா வந்தே பாரத்தில் RSS பாடல்... “இரயில்வே துறையை பயன்படுத்தும் சங்பரிவார்” - கேரள முதல்வர் கண்டனம்!
-
மீனம்பாக்கம் TO தேனாம்பேட்டை.. மெட்ரோவில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்... துரிதமாக உதவிய சென்னை மெட்ரோ!
-
பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு மருத்துவ வாகன சேவை -அமைச்சர் மா.சு. தகவல்!
-
நெல், கோதுமை விவகாரம் : பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி ஆதாரத்தோடு பதிலடி.. - விவரம்!
-
எர்ணாகுளம் TO பெங்களூரு.. வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் RSS பாடலை பாடியதால் சர்ச்சை!