India
வயிறு வலி என்று அழுத சிறுமி.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. பூனையுடன் விளையாடியபோது சோகம் !
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் (Jhalawar) என்ற பகுதியை அடுத்துள்ளது பெடாவா (Pedawa) என்ற இடம் உள்ளது. இங்கு 7 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பள்ளி ஒன்றில் படிக்கும் இந்த சிறுமி, வழக்கமாக தனது அண்டை வீட்டில் வளர்க்கும் பூனையுடன் விளையாடி வருவார். தினமும் பள்ளி முடித்த பின் அந்த பூனையும் சிறிது நேரமாவது விளையாடுவார் இந்த சிறுமி.
அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் விஷ்ணு டாங்கி என்ற 35 வயது நபர் சிறுமியிடம் தினமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இவையேதும் அறியாத சிறுமி, அங்கே சென்று விளையாடுவர். அந்த வகையில் சம்பவத்தன்றும் சிறுமி தனது பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடுவதற்கு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதால், தனது வீட்டுக்கு வந்த சிறுமியை தனியாக கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அழுதுகொண்டே தனது வீட்டுக்கு சென்றுள்ளார் சிறுமி. தொடர்ந்து வயிறு வலி என்று அழுதுகொண்டிருந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்.
அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் வளர்க்கும் பூனையுடன் விளையாட சென்ற சிறுமியை, 35 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!