India
மகளை அடித்துக்கொலை செய்த தந்தை.. சடலத்தை பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற கொடூரம்.. காரணம் என்ன ?
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் 20 வயது பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரியவந்த நிலையில், சடலத்தை மீட்டு அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் அந்த பெண் அமிர்தசரஸ் மாவட்டத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் காணாமல் போனதாகவும், திரும்பிவரவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், உயிரழந்த அந்த பெண்ணின் பாட்டி தனது பேத்தியை அவளது தந்தையே அடித்துக்கொலை செய்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்துள்ளது.
கடந்த புதன்கிழமை அந்த 20 வயது பெண் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அடுத்த நாளே மீண்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும் அவரின் தந்தைக்கும் இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண்ணின் தந்தை கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதன் காரணமாக அந்தப் பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதத்தால் தனது மகளை தாக்கிய நிலையில், அதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என குடும்பத்தினரை மிரட்டிய அந்த நபர் மகளின் சடலத்தை பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று, ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளார். எனினும் கொல்லப்பட்ட பெண்ணின் பாட்டியின் வாக்குமூலம் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!