India
இறந்துபோன தந்தைக்கு மனைவியாக நடித்த மகள்.. சண்டையில் போலீசிடம் போட்டுக்கொடுத்த கணவர்.. நடந்தது என்ன ?
உத்தர பிரதேச மாநிலம் அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் விஜரத் உல்லா கான். இவர் அரசு வேலையான சர்வேயராக (Surveyor) பணிபுரிந்து வந்தார். மனைவி, மகள் என குடும்பமாக வாழ்ந்து வந்த இவர், கடந்த 1987-ம் ஆண்டு இவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தனது ஓய்வு ஊதியம் பணத்தில் குடும்பத்தை கவனித்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2013-ம் ஆண்டு இவர் காலமானார். எனவே இவரது ஓய்வு ஊதியம் ரூ.12 லட்சம் பணம் அவரது மனைவிக்கு சேரும். ஆனால் விஜரத் உல்லா கான் இறப்பதற்கு முன்பே அவரது மனைவி உயிரிழந்துள்ளார். இதனால் தனது தந்தையின் பென்ஷன் பணத்தை பெறுவதற்கு மகள் ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி இறந்துபோன தந்தையின் மனைவியாக தனது பெயர் உள்ளிட்ட போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார். அதன்மூலம் 10 வருடங்களாக மகள் மோசினா பர்வேஸ் தனது தந்தையின் ஓய்வு ஊதிய பணத்தை பெற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஃபரூக் அலி என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்குள்ளும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே தனது மனைவி மோசினா பர்வேஸ், அவரது தந்தையின் மனைவியாக போலி ஆவணங்களை தயார் செய்து பென்ஷன் பெற்று வருவதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மோசினா பர்வேஸ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!