India
காதலிக்குமாறு தொல்லை.. மிரட்டிய பெண்ணின் தந்தை.. பழிவாங்க இளைஞர் செய்த செயலால் கேரளாவில் அதிர்ச்சி !
கேரள மாநிலம், திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த குண்டு ராவ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல முறை இது குறித்து அந்த பெண் எச்சரித்தும் அந்த இளைஞர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் தனது தந்தை ராஜேந்திரனிடம் இது குறித்து கூறியுள்ளது. அதன் பின்னர் ராஜேந்திரன் குண்டு ராவ்வை சந்தித்து, எனது மகளுக்கு இனி தொல்லை கொடுக்க கூடாது எனக் கூறியுள்ளார். இதன் காரணமாக குண்டு ராவ் ராஜேந்திரன் மீது கடும் கோவத்தில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னை மிரட்டிய ராஜேந்திரனை பழிவாங்க எண்ணிய குண்டு ராவ், ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று அங்கு ஜன்னல் வழியாக தான் கொண்டுவந்த பாம்பு ஒன்றை அறைக்குள் வீசியிருக்கிறார். எதோ சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் அறையில் பார்த்தபோது அங்கு பாம்பு இருந்ததை கண்டு அதனை அடித்து கொலை செய்துள்ளார்.
அதோடு பாம்பை வீசிய குண்டு ராவை பிடிக்க முயன்றபோது அவர் அதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அதன் பின்னர் இது குறித்து ராஜேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி விசாரணை நடத்திய போலீசார் குண்டு ராவை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை மிரட்டிய ராஜேந்திரனை பழிவாங்கும் விதமாக அவரின் வீட்டுக்குள் பாம்பை வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின்னர் போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!