India
டெல்லி மசோதா.. பா.ஜ.கவிற்கு தார்மீக உரிமைக்கூட இல்லை : மாநிலங்களவையில் ப.சிதம்பரம் ஆவேசம்!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு விவாதம் எதுவும் நடத்தாமல் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து வருகிறது.
அந்தவகையில் மக்களவையில் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவிற்கு இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் மக்களவையில் பா.ஜ.கவின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து இன்று மாநிலங்களவையில் மாநிலங்களவையில் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், "மாநிலங்கள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா அல்லது மாநகராட்சிகள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா? கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறித்து அதிகாரம் இல்லாதவையாக மாற்றுவதை எப்படிப் புரிந்துகொள்வது?
25 ஆண்டுகளாக பா.ஜ.கவால் டெல்லி மாநில ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 1998க் குப் பிறகு ஒரு முறை கூட டெல்லி மாநிலத்தில் பா.ஜ.கவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அரசியல் சாசனத்தின்படி மட்டுமல்ல, தார்மீக அடிப்படையில் கூட டெல்லி மசோதாவைக் கொண்டு வர பா.ஜ.க அரசுக்கு உரிமை இல்லை. இந்த மசோதா மூலம் அரசியல் சாசனத்தை பா.ஜ.க சீர்குலைக்கிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!