India
சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை.. சிறுவர்கள் ஆசனவாயில் மிளகாயை திணித்து கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதை விட கொடுமையான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் சிலர் 15 மற்றும் 10 வயதுடைய சிறுவர்களை திருடியதாக பிடித்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் சிறுநீரைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதோடு நிற்காத கொடூரர்கள் சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி அவர்களின் ஆசனவாயில் பச்சை மிளகாயை திணித்து கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவர்களை கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் சில அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலிஸார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேரை கைது செய்தனர். பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெறும் இதுபோன்ற கொடூரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!