India
மனைவியின் கை விரலை கடித்து விழுங்கிய கணவர்.. காரணம் என்ன? : அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்குத் திருமணம் நடந்து 23 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மனைவி புஷ்பா கணவரை விட்டுப் பிரிந்து சென்று தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 28ம்தேதி புஷ்பாவின் வீட்டிற்கு விஜயகுமார் வந்துள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் புஷ்பாவின் கை விரலைக் கடித்து விழுங்கியுள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவர் அலறி துடித்துள்ளார். பிறகு அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு புஷ்பாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து புஷ்பா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி