India

மோடி அரசை பணிய வைத்த ”இந்தியா” கூட்டணி.. மணிப்பூர் வன்முறை குறித்து 3 நாள் விவாதம் எப்போது தெரியுமா?

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.

அதோடு பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஏன் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாமல் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து பேசிய தீரவேண்டும் என்ற வகையில் இந்திய கூட்டணி எம்.பி ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானம் குறித்து விவாதம் நடத்தாமல் ஒன்றிய அரசு நாட்களை கடத்தி வந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆகஸ்ட் 8 முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாலியல் வன்முறை நடந்து 18 நாட்கள் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்?.. பா.ஜ.க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!