India
கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் குதித்த இளைஞன்.. மீட்க வந்த தீணைப்பு வீரர்களுக்கு காத்திருந்த ஷாக்!
கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் ஆறு மற்றும் நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள துங்கா நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இங்கு உள்ள பாலத்திற்கு கங்கப்பா யானே என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் வந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பாலத்தின் மீது எரிய இளைஞன் திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இவர்கள் வருவதற்குள் அந்த இளைஞர் நீந்தி கரையை அடைந்துள்ளார். இதையடுத்து அவரிடம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் ஏன் குதித்தாய் என கேட்டுள்ளனர். இதற்கு இளைஞன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த இளைஞன், "ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் குளிக்க ஆசையாக இருந்தது. இதனால் பாலத்தின் மீது இருந்து குதித்து நீந்தினேன்" என கூறியுள்ளார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் "இப்படி எல்லாம் வீன் விபரீத விளையாட்டில் ஈடுபடக் கூடாது. ஆற்றின் ஓட்டம் அதிகமாக இருக்கும் போது நீந்துவது கடினமாக இருக்கும். உன்னை அப்படியே இழுத்துச் செல்லும்" என எச்சரித்து அனுப்பி வைத்தனர்
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!