India
தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்.. CCTV ஆதாரத்துடன் கைது செய்த போலிஸ்!
பஞ்சாப் மாநிலம், மோகா பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார். இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனால் தெரு நாய் எப்படி இறந்தது என அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் குமார், இந்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதேபகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் தெரு நாயிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தெரு நாயை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!