India
6 வயது குழந்தை உட்பட 4 பேர் வீட்டோடு எரித்து கொலை.. மனதை நடுங்க வைக்கும் சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திற்குட்பட்ட செரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பூனாரம். இவரது மனைவி பன்வாரி. இந்த தம்பதியின் மகன் தபூ. இவருக்குத் திருமணமாகி மனிஷா என்ற ஆறு வயதில் பெண் குழந்தை இருந்தது. இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது வீடு முழுவதும் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலிஸார் விரைந்து வந்தனர். ஆனால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
பின்னர் போலிஸார் எரிந்த வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்தபோது, ஆறுமாத பெண் குழந்தை உட்பட 4 பேரின் சடலம் கருகிய நிலையில் இருந்ததை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இறந்த நான்கு பேரின் குழத்து அறுத்து கொலை செய்து பின்னர் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டுத் தப்பிச் சென்றது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த குடும்பத்துடன் தொடர்புடைய 17 வயது இளைஞன் ஒருவரை போலிஸார் சந்தேகத்தின்படி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வீட்டோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!