India
பட்டப் பகலில் இளைஞரை வெட்டி கொலை செய்த குடும்பம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
டெல்லியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சல்மான் ஜாஃப்ராபாத் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த பெண்ணின் தந்தை மன்சூர், சகோதரர் மோஷின் மற்றும் சிலர் வழிமறித்துத் தடுத்துள்ளனர்.
பின்னர் தங்கள் மறைத்து எடுத்து வந்த கொடூர ஆயுதங்களை எடுத்து சல்மான் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பலத்த வெட்டுக் காயத்துடன் உயிரிழந்து கிடந்த சல்மான் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை மன்சூர், சகோதரர் மோஷின் ஆகியோரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது அங்கு வசித்து வரும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!