India
பொதுமக்கள் முன் 12 முறை கத்தியால் குத்தப்பட்ட பெண்.. மருத்துவமனையில் நடந்த கோர சம்பவத்தின் பின்னணி என்ன?
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் லிஜி (40). இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அலுவா என்ற பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் காதலை விஜியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக லிஜிக்கு வேறொரு மாப்பிள்ளையை தேடினர்.
பெற்றோர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத விஜியும், மகேஷுடன் இருந்த தனது காதலை முறித்துக்கொண்டுள்ளார். மேலும் பெற்றோர் கட்டாயத்தின் பேரில் துறவூர் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராஜேஷ் கத்தாரில் பணி புரிந்து வருகிறார். எனவே திருமணத்துக்கு பின்னரும் லிஜி தனது முன்னாள் காதலன் மகேஷுடன் போனில் பேசி வந்துள்ளார்.
ஆனால் திடீரென்று லிஜி மகேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மகேஷ் மன உளைச்சலுக்கு உள்ளானார். தொடர்ந்து லிஜிக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்காமல், இவரை முழுமையாக தவிர்த்துள்ளார். இதனால் நேரில் சென்று இந்த பிரச்னையை பேச வேண்டும் என்று மகேஷ் லிஜியை பார்க்க முயன்றார். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை.
இந்த சூழலில் லிஜியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரை எர்ணாகுளம் அருகே அங்கமாலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, லிஜி கவனித்து வந்துள்ளார். இதனை அறிந்த மகேஷ், சம்பவத்தன்று லிஜியை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்துமடைந்த மகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தனது முன்னாள் காதலி லிஜியை குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். யுள்ளார்.சுமார் 12 முறை குத்தியதால் லிஜி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த சம்பவத்தின் குற்றவாளியான மகேஷை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெட்ட வெளியில் மருத்துவமனையில் முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த காதலனின் செயல் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!