India
3 பெண் பிள்ளைகள்.. மாதக்கணக்கில் மனைவியை பட்டினியுடன் சிறை வைத்த கணவர்.. காரணம் என்ன ?
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்துள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் சந்த் பாஷா. இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் இவருக்கும் இவரது பக்கத்து ஊரை சேர்ந்த சபீஹா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அடுத்த ஆண்டே குகுழந்தை பிறந்தது.
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட நிலையில், பெண் குழந்தை பிறந்தது. இதனால் மீண்டும் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணினார் சந்த் பாஷா. இப்படியே 2-வது குழந்தையும், 3-வது குழந்தையும் பெண் பிள்ளையாகவே பிறந்ததால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக சபீஹா அடிக்கடி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார்.
அவ்வாறு செல்லும்போது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டு செல்வர் சபீஹாவின் குடும்பத்தினர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று சமரசம் பேச்சு வார்த்தை நடத்தி, சேர்த்து வைத்தனர். ஆனாலும் அவர் தனது மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். ஆண் பிள்ளை பெற்று கொடுக்கவில்லை என்பதால், சபீஹாவை விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க எண்ணியுள்ளனர் சந்த் பாஷாவின் குடும்பத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபீஹாவை அவர்களது வீட்டின் மாடியில் உள்ள சின்ன அறையில் சிறை பிடித்து வைத்தனர். மேலும் அவரை அடித்து துன்புறுத்தி, கை விரல்களை உடைத்தும், ஒரு மாதமாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டும் கொடுமை செய்துள்ளனர். சபீஹா குறித்து வெளியே எதுவும் தெரியாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது குடும்பத்துக்கு தகவல் கூறியுள்ளனர்.
பின்னர் சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் உதவியோடு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கள் மகளை மீட்டனர். தொடர்ந்து சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சபீஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆண் பிள்ளை பெறாத ஆத்திரத்தில், தனது மனைவியை பட்டினியுடன் ஒரு மாத காலமாக சிறை வைத்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!