India
‘இப்போ வாங்கடா பாக்கலாம்..’ - தக்காளிக்கு பவுன்சர்ஸ் நியமித்த வியாபாரி.. இறுதியில் நேர்ந்த கதி !
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தக்காளி விலை குறைக்க ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் விலை உயர்வால் தக்காளிக்கே போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என பலரும் கிண்டல் அடித்து வரும் நிலையில் பல இடங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தக்காளிக்கு பாதுகாவலராக 2 பவுன்சராசை நியமித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை அடுத்துள்ள லங்கா என்ற பகுதியை சேர்ந்தவர் அஜய் பவுஜி. காய்கறி வியாபாரியான இவர், அந்த பகுதி ஒன்றில் காய்கறி கடை நடத்தி வருகிறார். மேலும் தனது கடை வாசலில் `முதலில் பணம், பிறகு தக்காளி', தயவு செய்து தக்காளியைத் தொடாதீர்கள்', `9 வருட பணவீக்கம்' போன்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டரை தொங்கவிட்டு தக்காளி விலை உயர்வுக்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தனது கடையின் வாசலில் 2 ஜிம் பாய்சை நிற்கவைத்துள்ளார். அவரது கடையில் காய்கறிகளைக் குறிப்பாகத் தக்காளி வாங்க வருபவர்கள் பேரம் பேசுவதக்கவும், அவர்கள் கோபமடையாமல் இருக்கன்வே தனது கடை முன்னே காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 2 ஜிம்பாய்ஸ்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், இவர்கள் வந்த பிறகு மக்கள் அதிகம் பேரம் பேசுவதில்லை என்றும் தெரிவித்தார்.
தக்காளியை யாரேனும் எடுத்து விட கூடாது என்பதாலும், தக்காளி விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இவர் இந்த செயலை செய்தார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த சூழலில் இந்த காய்கறி வியாபாரி மீது உபி போலீசார் பல்வேறு பிரவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.
தக்காளிக்கு பவுன்சர்ஸ் வைத்த வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாகி தேடி வரும் சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!