India
திருமணத்தில் புகைப்பிடித்து நடனமாடிய மாமியார்.. அதிர்ச்சியில் மணமகன் எடுத்த முடிவு: சோகத்தில் மணமகள்!
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கு ராஜ்புராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி ஜூன் 27ம் தேதி திருமணத்திற்கான முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
அப்போது மணமகன் வீட்டாரைப் பெண் வீட்டார் உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் ஆட்டம் பாட்டத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அந்நேரம் மணமகளின் தாயார் புகைப்பிடித்த படியே நடனமாடியுள்ளார்.
மேலும் புகையை நடனமாடிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப்பார்த்து மணமகனின் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடனே மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திருமணம் நின்றதை அடுத்து திருமணத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
Also Read
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் : ரூ.1000 கோடி நிதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!