India
7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்.. பள்ளி கழிவறையில் அரங்கேறிய கொடூரம்: பெற்றோர் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம் பூனே பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுவர் - சிறுமிகள் படித்து வரும் இங்கு, 7 வயது சிறுமியும் படித்து வருகிறார். வழக்கம்போல் இந்த பள்ளி கடந்த ஜூன் 26-ம் தேதியும் இயங்கியது. அப்போது இந்த 7 வயது சிறுமி, வகுப்பு எடுத்து கொண்டிருக்கும்போது தனது ஆசிரியரிடம் சொல்லி விட்டு இயற்கை உபாதை கழிக்க கழிவறை சென்றுள்ளார்.
இதனை கண்ட அதே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவர், சிறுமியின் பின்னாலே சென்றுள்ளார். அங்கே பெண்கள் கழிவறைக்குள் சென்ற அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் மனதை மிகவும் பாதிக்கவே, உடனே பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழுது கொண்டே சென்றுள்ளார்.
அங்கே தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே பள்ளியிலும், காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் சிறுவனை கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்ட வருகிறது. பள்ளி கழிவறையில் வைத்து 7 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!