India

டீ கப்பில் இருந்த Style ஆன 'T'.. டீ கடையை பூட்டி சீல் வைத்த தேவஸ்தானம்: திருப்பதியில் அதிர்ச்சி -பின்னணி?

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் திருமலை என்ற இடத்தில பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. இதில் நாடு முழுவதுமுள்ள மக்கள் வந்து இங்கிருக்கும் ஏழுமலையானை வழிபடுவர். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த சூழலில் இங்கு பிற மத அடையாளங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேவஸ்தானம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த விதி அங்கே மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அங்கே இருக்கும் டீ கடை ஒன்றில் சிலுவை வடிவிலான குறியுடன் டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக தேவஸ்தானத்துக்கு சிலர் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் அந்த கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடையில் இருக்கும் டீ கப்பில் 'T' என்ற எழுத்து சிலுவை வடிவில் இருந்துள்ளது. இதனை கண்ட அதிகாரிகள் இந்த நிகழ்வு குறித்து அவர்களிடம் கேட்டனர். மேலும் இந்த டீ கப்புகள் எப்படி கிடைத்தது, எதற்காக இந்த பகுதியில் பயன்படுத்துகிறீர்கள் என்று விசாரித்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்பதால், தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் அந்த டீ கடையை பூட்டி சீல் வைத்தனர்.

அதோடு உரிய விளக்கத்தை தேவஸ்தான விஜிலன்ஸ் அலுவகத்திற்கு நேரில் வந்து அளிக்குமாறும் அந்த கடையின் உரிமையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிற மத அடையாளங்களை கோயிலின் அருகே பயன்படுத்தி மத பிரசாரம் செய்யக்கூடாது என அந்த கோயில் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது ஒரு T என்ற எழுத்து பிரச்னை காரணமாக டீ கடைக்கே சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்: “தீட்சிதர்களின் அறிவிப்பு பலகை அகற்றம் ! - அதிரடி காட்டிய அறநிலையத்துறை !