India
“லிவ்-இன் உறவில் சிக்கல்கள்.. சட்டரீதியாக வழிமுறைகள் கட்டமைக்க வேண்டும்” : அலகாபாத் ஐகோர்ட் கருத்து !
திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது மதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது எனக்கூறி காவல் துறையினரிடமிருந்து பாதுகாப்பு கோரி இஸ்லாமிய லிவ்-இன் ஜோடியின் வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லிவ்-இன் முறையில் வாழ்ந்து வருவதால் காவல்துறையினரைக் கொண்டு குடும்பத்தினர் துன்புறுத்துவதாகக் கூறி இந்துப்பெண் - இஸ்லாமிய ஆண் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது இஸ்லாமிய முறைப்படி திருமணத்திற்குமுன் தொடுவது, முறைத்துப் பார்ப்பது, உடலுறவு கொள்வது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நேரும் பட்சத்தில் ஆளுக்கு தலா 100 சவுக்கடிகள் வழங்க வேண்டும் என குரானில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையின் பேரில் திருமணம் மற்றும் அதுசார்ந்த அச்சுறுத்தல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேஜர் வயதை எட்டியவர்கள் தன்னுடன் யார் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உரிமையுடையவர்கள் எனவும், லிவ்-இன் உறவில் சிக்கல்கள் எழும்போது அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில், வழிமுறைகள் கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று மாற்று மத லிவ்-இன் ஜோடியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!