India
ஸ்பெஷல் வகுப்பு சென்ற மாணவி கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்.. 2 போலிசார் கைது !
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் என்றார் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனியாக கணினி வகுப்புக்கு தினமும் சென்று வந்துள்ளார். இந்த சூழலில் இவர் தனியாக செல்வதை அறிந்த இளைஞர் ஒருவர் அவரை தொடர்ந்து பின் தொடர்ந்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கும் மேலாக பின் தொடர்ந்த அந்த நபர் அவரை கடத்தியுள்ளார்.
இந்த நபருக்கு கஜுவாலா காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு காவலர்கள் உதவியுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை கடத்தி சென்ற அவர்கள் அவரை அடைத்து வைத்து கொடுமை படுத்தியுள்ளனர். மேலும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், தங்களுக்கு பிரச்னை என்று எண்ணிய அவர்கள், அந்த பெண்ணை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த பெண்ணின் சடலம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், அதனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணை தினேஷ் என்பவர் கடத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த சம்பவத்தில் இரண்டு போலீசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 காவலர்களும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது.
Also Read
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் MK ஸ்டாலின் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
- 
	    
	      SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!