India
பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை.. வலைவிரித்து தேடும் கர்நாடக போலிஸ் ! - பின்னணி என்ன ?
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா என்ற நகரில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். மரலகல கிராமத்தில் உள்ள விருபாக்ஷாவின் பண்ணையில் வேலை பார்க்கும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகியுள்ளது. கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த தம்பதிக்கு ஆதர்ஷ் என்றார் 4 வயது ஆண் குழந்தையும், அமுல்யா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த சூழலில் இன்று திடீரென ஸ்ரீகாந்த் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. தொடர்ந்து கத்தல் கூச்சல் என கேட்டுக்கொண்டே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் அங்கே வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஸ்ரீகாந்தின் மனைவி கத்தியால் வெட்டப்பட்ட நிலையில், இரத்த கோரங்களுடன் கீழே கிடந்தார். தொடர்ந்து பிள்ளைகள் எங்கே என்று பார்க்கையில், அவர்களும் மற்ற பகுதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
சிறுவன் - சிறுமி ஆகியோர் கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டு கிடந்தனர். இதனை கண்டதும் அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர், உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து விசாரிக்கையில், அவர்களை கொலை செய்தது ஸ்ரீகாந்த் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், தலைமறைவாக இருக்கும் ஸ்ரீகாந்தை தேடி வருகின்றனர். எனினும் குற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை. தந்தையே தனது 2 குழந்தைகளையும், மனைவியையும் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !