India
செலவுக்கு ரூ.2000 கொடுக்காததால் ஆத்திரம்.. தந்தைக்கு மகனால் நடந்த கொடூர சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பாபு சவுத்ரி. இவரது மகன் சோகன். இந்நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி பாபு சவுத்ரி வயல் வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மகன் சோமன், செலவுக்கு ரூ.2000 பணம் கேட்டுள்ளார். இதற்கு அவரது தந்தை தரமறுத்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த சோமன் அங்கிருந்த கல்லை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பாபு சவுத்திரி மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து சோமன் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் பாபு சவுத்திரி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 பணத்திற்காகத் தந்தையை மகனே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தருமபுரி - ரூ.39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!