India
அக்காவுக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தம்பி உயிரோடு எரிப்பு.. ஆந்திராவை உலுக்கிய கொடூரம் !
ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். இவர் அங்குள்ள ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரில் அக்கா அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத்தின் அக்காவை அதே பகுதியை இருந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மெசேஜ் மூலம் தொடர்ந்து ஆபாசமாக பேசிவந்துள்ளார். அக்காவின் மொபைலை பார்த்த அமர்நாத்துக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.
அவர் தனது வீட்டாரிடம் இதுகுறித்து கூறிய நிலையில், அவர்கள் வெங்கடேஷை எச்சரித்துள்ளனர். இதனால் வெங்கடேஷ் அமர்நாத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில்ம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமர்நாத் சைக்கிளில் வெளியே சென்றபோதுபோது வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் அமர்நாத்தை வழிமறைத்து அவரின் கைகளை கட்டி, வாயை பொத்தியுள்ளார்.
மேலும் அங்கிருந்த தார்பாயில் அவரை சுருட்டி, தான் கொண்டுவந்த பெட்ரோலை வைத்து அமர்நாத்தை உயிரோடு எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அமர்நாத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் 90 சதவீத காயங்களோடு அமர்நாத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் வெங்கடேஷ் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!