India
’நாங்களும் உங்களுடன் வரோம்’.. கணவன் இறந்த துக்கத்தில் 2 மகள்களுடன் மனைவி எடுத்த விபரீதம்!
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணா. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு சந்திரகலா, சவுஜன்யா என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து சூரிய நாராயணன் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனால் குடும்பம் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் சூரிய நாராயணன் உயிரிழந்துள்ளார். கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மற்றும் மகள்கள் இருந்து வந்துள்ளனர். மேலும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அவர்களை அங்கிருந்த போலிஸார் காப்பாற்றி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் வீட்டில் மனைவி விஜயலட்சுமி, மகள்கள் சந்திரகலா மற்றும் சவுஜான் ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மூன்று பேர் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் தற்கொலைக்கு முன்பு இவர்கள் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் "எங்களின் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. கணவர் இறந்து விட்டதால் மன வேதனையில் நாங்கள் தற்கொலை செய்து கொண்டோம். அவர் இடத்திற்கே நாங்கள் செல்கிறோம்" என எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!