India

விவாகரத்து ஆன பெண்களே குறி! வடஇந்தியா முதல் தென்னிந்தியா வரை.. ஏமாற்றி மோசடி செய்த நபர் சிக்கியது எப்படி?

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாசார்யா. 55 வயது நபரான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கும் சூழலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

தபேஷ் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இந்த சூழலில் கர்நாடக, பெங்களூருவுக்கு குடியேறிய அவர், பணம் சம்பாதிக்க பல வழிகளில் முயன்றார். இதையடுத்து இறுதியாக வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய அவர், இளம்பெண்கள், இளைஞர்கள் என பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க தொடங்கினார்.

இதையடுத்து மேலும் பணம் சம்பாதிக்க எண்ணிய அவர், தனியார் மேட்ரிமோனி இணையதளத்தில் திருமண வரணுக்கு விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து கணவரை இழந்த பெண்கள், விவாகரத்து ஆன பெண்கள் உள்ளிட்டோரை குறிவைத்து அவர்களிடம் வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகி பேசி வந்துள்ளார்.

தொடர்ந்து அவர்களை திருமணம் செய்துகொள்வதாக கூறி, அவர்களிடம் இருந்து லட்ச கணக்கில் பண மோசடி செய்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி வந்துள்ளார். குறிப்பாக மேற்கு வங்கம், கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரபிரதேசம், ஒடிசா பல மாநிலங்களில் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து ஏமாற்றப்பட்ட பெண்களில் சிலர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பல்வேறு மாநில போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த சூழலில் அரியானாவில் தலைமறைவாக இருந்த தபேஷை அரியானா போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது இதுபோல் பல பெண்களை ஏமாற்றி வந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அவர்மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: காதலியை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய கோயில் பூசாரி -4 நாட்களுக்கு பிறகு கைது செய்த போலிஸ்.. பின்னணி?