India
6 வயது பாச மகளை கோடாரியால் கொன்ற கொடூர தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்.. கேரளாவில் நடந்தது என்ன?
கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமம். இங்கு ஸ்ரீமகேஷ் - வித்யா தம்பதி வசித்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6 வயதில் நட்சத்திரா என்ற மகள் உள்ளார். இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு குடும்ப தகராறு காரணமாக மனைவி வித்யா தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி தற்கொலைக்கு பிறகு தனது தாய், தந்தை, மகள் என வாழ்ந்து மகேஷ் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில் தந்தையும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இதனால் 62 வயது தாய் மற்றும் மகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்த இவர், மீண்டும் 2-வது முறையாக திருமணம் செய்ய எண்ணியுள்ளார்.
அதன்படி பெண் பார்க்க பலமுறை சென்றுள்ளார். ஆனால் இவருக்கு பெண் குழந்தை இருப்பது ஒரு தடையாகவே இருந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இவர் பெண் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் தாய் பக்கத்துக்கு வீட்டில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென சிறுமி நட்சத்திராவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டு பதறி வந்த அவர் பார்க்கையில் மகேஷ், தனது கையில் கோடாரியை வைத்து நின்றுள்ளார்; சிறுமி இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ந்த பாட்டி, உடனே தனது பேத்தியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தந்தை மகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகள் இருப்பதால் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகவில்லை என்ற ஆத்திரத்தில் தனது மகளை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 வயது பெண் குழந்தையை அவரது தந்தையே கோடாரியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!