India
திருமணம் முடிந்த அடுத்த நாளே கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திய மனைவி- வெளிவந்த அதிர்ச்சி காரணம்!
பீகார் மாநிலம் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்த சூர்யபூஷண் குமார் என்பவர் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நேஹா குமாரி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். காதலிக்கும்போது நேஹா குமாரி தன்னை திருமணம் செய்யுமாறு சூர்யபூஷனிடம் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நேஹா குமாரியின் வற்புறுத்தல் தீவிரமடையவே வேறு வழியின்றி சூர்யபூஷண் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் தனது வீட்டாருக்கு தெரியாமல் நேஹா குமாரியுடன் சென்று ஜூன் 5ஆம் தேதி அன்று பாட்னாவில் பதிவு திருமணம் செய்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அறை தங்கியிருந்துள்ளனர். திருமணம் முடிந்து அடுத்த நாளில் சூர்யபூஷண் தனது மனைவியிடம் தனது வீட்டார் தனக்கு பெண் பார்த்து வருவதாகவும், திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நேஹா குமாரி, நாம் திருமணம் செய்ததை கூறி உடனே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், இதற்கு சூர்யபூஷண் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்படுவோம் என அச்சமடைந்த நேஹா குமாரி ஆத்திரத்தில் அங்கு இருந்த கத்தியை எடுத்து தனது கணவர் சூர்யபூஷணின் அந்தரங்க உறுப்பில் குத்தியுள்ளார். இதில் சூர்யபூஷன் அலறித்துடித்து உடனடியாக ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறி ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.
தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் சூர்யபூஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து மனைவி நேஹா குமாரியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!