India
இந்தியாவில் 4 ஆண்டுகளில் 44% அதிகரித்த சர்க்கரை நோய்.. 13 கோடி மக்களுக்கு அறிகுறி: ICMR பகீர் ரிப்போர்ட்!
நவீன காலத்தில் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை (DIABETICS) ஃபேஷனாக நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நீரிழிவு நோயால் தற்போது 30 வயதைக் கடந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில் நகரங்களில் மட்டுமே பரவலாக இருந்த இந்த சர்க்கரை நோய் தற்போது கிராமப்புறங்களிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அதேபோல், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. ஐ.சி.எம்.ஆர். ஆய்வு அறிக்கை ஒன்று இங்கிலாந்தின் மருத்துவ இதழான Lancet-ல் இடம் பெற்றுள்ளது. அதில், இந்தியா முழுவதும் சர்க்கரை நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 கோடியே 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு 7 கோடியாக மட்டுமே இருந்த சர்க்கரை நோய் 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகளவாக கோவாவில் 26.4 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி, கேரளா, சண்டிகர், டெல்லி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனிடையே, 13 கோடிக்கும் அதிகமானோருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறியாக கருதப்படும் பிரீடையபெட்டிக்ஸ் உள்ளது என்றும் ஐசிஎம்ஆர் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!