India
திடீரென வந்த வாட்ஸ்அப் வீடியோ கால்.. நிர்வாணமாக பேசிய பெண்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !
மும்பையை சேர்ந்த 39 வயதான நபர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி தெரியாத எண் ஒன்றில் இருந்து வாட்சப்பில் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் பேசியுள்ளார்.
பேசிக்கொண்டிருந்தவர் திடீரென தனது உடையை எல்லை நீக்கி முழு நிர்வாணமாக இருந்துள்ளது. இதனைக் கண்டு பதறிய அந்த நபர் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த நபருக்கு ஒரு எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்துள்ளது.
அதனை திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், அந்த நபர் நிர்வாணமாக பேசிய அந்த பெண்ணோடு வீடியோவில் இருப்பதைப் போல காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் சிறிது நேரத்துக்கு பின்னர் வேறோடு எண்ணில் இருந்து அவருக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது.
அதில் பேசியவர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்லும் நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டு 50 ஆயிரம் ரூபாயை அந்த நபர் சொல்லிய வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.
அதன் பின்னரும் அந்த மர்ம நபர் அந்த 39 வயது நபரை தொடர்பு கொண்டு பல்வேறு கட்டமாக சுமார் ஆறரை லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். அதோடு நிற்காமல் தொடர்ந்து பணம் தரவேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால் வேறு வழியின்றி அந்த நபர் காவல்நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!