India
”எழுத்தாளர்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை”.. கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!
கர்நாடகாவில் நடந்து முடித்த தேர்தலில் அபார வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இம்மாநில முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்றார். இந்நிலையில் கர்நாடகாவில் வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவில் எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா,"கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெறுப்பு அரசியலைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
நாட்டை ஆபத்தில் ஆழ்த்தும், இந்த மண்ணின் பன்மைத்துவத்தை அழிக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும், நூல்கள் மற்றும் பாடங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்தும் செயலை மன்னிக்க முடியாது. கல்வியாண்டு துவங்கியுள்ளதால், குழந்தைகளின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கன்னடப் போராளிகள், விவசாயிகள்- தொழிலாளர்- தலித் இயக்கங்கள், இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் மீதான பொய் வழக்குகள் திரும்பப்பெறப்படும்.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித் துறையில் கலப்படம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது தொடர்பாக மீண்டும் ஒரு முறை தனிக் கூட்டம் கூட்டப்பட்டு விரிவான முறையில் விவாதித்து கடுமையான மற்றும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்.
எழுத்தாளர்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு நான் ஏற்கனவே கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். எழுத்தாளர்கள் கொடுத்துள்ள கடிதத்தில் உள்ள உண்மைகளைத் தீவிரமாகப் பரிசீலிப்பேன். தேவைக்கேற்ப எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும் போன்ற வாக்குறுதிகளையும் முதல்வர் சித்தராமையா அளித்துள்ளார்.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!