India
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? மாடியில் இருந்து தூக்கிவீசிய ஆசிரியர்கள்.. உ.பி-யில் கொடூரம்!
தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இங்கு அயோத்தியில் செயல்பட்டு வரும் சன்பீம் என்ற தனியார் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பள்ளியின் முதல்வர், பள்ளிக்கு வருமாறு அளித்துள்ளார்.
பள்ளியின் முதல்வர் கூறியதால் முக்கியமான விவகாரம் என எண்ணி அந்த மாணவி பள்ளிக்கு வருகை தந்துள்ளார். ஆனால் அந்த மாணவி பள்ளிக்கு சென்ற சில மணி நேரம் கழித்து அவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பள்ளியில் இருந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பள்ளிக்கு சென்று மகளின் உடலை பார்த்துள்ளனர். அப்போது மாணவியின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், மாணவி மாடியில் ஊஞ்சல் ஆடிய போது தவறி விழுந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் அடைந்த மாணவியின் உறவினர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி போலிஸார் அங்கு வந்து விசாரணை நடத்தியபோது மாணவி விழுந்த இடத்தில் இருந்த ரத்தகறை முன்பே அழைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை நடத்தியபோது மாணவியை மாடியில் இருந்து தள்ளி விட்டு விழுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இதனிடையே மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாகவும், இதற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியா உடந்தையாக இருந்ததாகவும் புகார் கூறியுள்ளனர். அதன்படி போலிஸார் அவ்ர்கள்மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மாணவியின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியானதும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!