India
5 மாணவிகளுக்கு பாலியல் மிரட்டல் - ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. பீகாரில் பரபரப்பு !
பீகார் மாநிலம் லக்கிசராய் என்ற பகுதியில் வசிப்பவர் அமித்குமார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி சாஹிபா குமாரி என்ற மனைவி உள்ளார். இந்த சூழலில் இவர் தனது வீட்டில் வைத்து மாணவிகளுக்கு என்று தனியாக சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறார். இதில் அக்கம்பக்கத்தில் உள்ள மாணவிகள், அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் என வந்து படிக்கின்றனர்.
படிப்பதற்காக மாணவிகள் வந்தால் அவர்களை தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளார் ஆசிரியர் அமித். அந்த வகையில் அங்கு படிக்க வந்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி, தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைத்துள்ளார்.
சரயுக் என்ற அந்த ஹோட்டலில் மாணவிகளை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் ஆசிரியர் அமித். இதனை அந்த ஹோட்டலின் மேனேஜர் வினோத் குமார் குப்தா என்பவர், அமித்தின் அனுமதியோடு வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். மேலும் அவரும் சேர்ந்து மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஆசிரியரின் மனைவி சாஹிபா குமாரியும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த விவகாரம் சுமார் 5 ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் அந்த மாணவிகளை தொடர்ந்து தோணும்போதெல்லாம் ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பொறுமை இழந்த மாணவிகளில் 2 பேர், தங்களுக்கு நடந்த கொடுமைகளை தங்கள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ந்த அவர்கள் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய சிப், மொபைல் போன்கள், சிசிடிவி மூலம் வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்திய டிவிஆர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தன்னிடம் சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவிகளை மிரட்டி 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஆசிரியரின் செயல் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!