India

மக்களே எச்சரிக்கை ! பெட்ரோல் பங்கில் மொபைல் போன்.. திடீரென பற்றிய தீ.. இளம்பெண் பரிதாப பலி !

பொதுவாக பெட்ரோல் பங்குகளில் மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் மொபைல் போன்களை எடுத்து பயன்படுத்துவர். இவ்வாறு பயன்படுத்தும்போது சில நேரங்களில் விபரீதங்கள் ஏற்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியல் உள்ள பெட்ரோல் பங்கில் பவ்யா என்ற இளம்பெண் தனது தாயார் ரத்னம்மாவுடன் (46) தனது வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அப்போது அவரது தாய் இறங்கி அருகிலேயே நிற்க, மகளோ பெட்ரோல் நிரப்பும் பம்ப் அருகே வண்டியில் இருந்து கொண்டு மொபைலை பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் திடீரென அவர் கையில் இருந்த செல்போன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக்கண்டதும் பதற்றமடைந்த இளம்பெண், அவரது தாய், பெட்ரோல் பங்க் ஊழியர் ஆகியோர் அங்கிருந்து ஓடினர். இருப்பினும் அந்த இளம்பெண்ணின் ஆடையில் தீ பற்றிக்கொண்டது. அதனை அணைக்க முயற்சித்தும் பயனில்லாமல், அந்த தீ அவரது உடல் முழுவதும் பரவியது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பைக்கில் பற்றிய தீயை அணைத்ததோடு, அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்கு அதீத காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இதுபோல் யாரும் செய்ய வேண்டாம், மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மேஜை டிராயரில் சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு.. அலறி அடித்து ஓடிய பார் மேனஜர்.. வைரலாகும் புகைப்படம் !